Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செம்பட்டு குடியிருப்புகளை அகற்றும் முயற்சிக்கு SDPI கட்சி கண்டனம்!

செம்பட்டு குடியிருப்புகளை அகற்றும் முயற்சிக்கு SDPI கட்சி கண்டனம்!

SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி “தலைவர்கள் சங்கமம்” நிகழ்ச்சி தொகுதி தலைவர் I.சபியுல்லா தலைமையில் நடைபெற்றது.

SDPI கட்சி வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி,SDPI கட்சி திருச்சி மண்டல செயலாளர் A.நியமத்துல்லா,மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M. அப்சல் கான் Tech மற்றும் தொகுதி இணைச் செயலாளர் தர்கா. அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தொகுதி செயலாளர் சுஹைப் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

தொகுதியின் துணைத் தலைவர் அமீர் பாஷா அவர்கள் “கொள்கையை பற்றி பிடிப்போம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மகளிர் அணி மாவட்ட தலைவர் தாஜ் நிஷா அவர்கள் ” அரசியலில் பெண்களின் பங்களிப்பு ” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K. தமீம் அன்சாரி அவர்கள் ” மாவட்டத்தின் பார்வை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் இமாம்.R. ஹஸ்ஸான் பைஜி.,MBA.,LLB., அவர்கள் கலந்துக் கொண்டு ” SDPI கட்சியின் தொலைநோக்கு பார்வை” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

தொகுதி துணைத் தலைவர் இம்தியாஸ் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

1.150 ஆண்டு காலமாக செம்பட்டு பகுதியில் வசித்து வரும் குடும்பங்களை அப்புறப்படுத்த முயல்வதற்கு வன்மையான கண்டனங்கள். அவர்களின் இருப்பிடங்களை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

  1. வணிக பெருமக்கள் அதிகம் நிறைந்துள்ள பாலக்கரை பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் பொது கழிப்பிடம் அமைத்து தர வேண்டும்.

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் Er.சதாம் உசேன்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் ( பாபு) B.com.,DCA., மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் தவுலத் நிஷா,மகளிர் அணி IT wing தலைவர் சையது பீவி,கிழக்கு தொகுதி மகளிர் அணி செயலாளர் ஹபீபு நிஷா, IT wing மகளிர் அணி கிழக்கு தொகுதி தலைவர் ஆஃப்ரின்,வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சதாம் உசேன்,Young Democrats மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் A.முகமது தமீம் ,IT wing தொகுதி தலைவர் நஸ்ருதீன்,மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக தொகுதியின் பொருளாளர் அபுதாஹிர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

error: Content is protected !!