Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சாவூர்… பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சாவூர் தென் கீழ் அலங்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கப்பட்ட முதல் நாளில் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி ஆண்டு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து 4ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் பள்ளிகள் இன்று 10ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இன்று காலை தமிழம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அந்த வகையில் தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூக்களை கொடுத்து ஆர்வமுடன் பாடங்களை கற்று முன்னேற வேண்டும் என்று வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மதன்குமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேலு மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதையடுத்து இப்ப பள்ளிக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். பின்னர் பள்ளியில் அமைந்துள்ள நவீன கணினி ஆய்வகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் அவரவர் வகுப்பறைகளுக்கு வரிசையில் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!