Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பற்களால் மினி பஸ்சை இழுத்து… பள்ளி மாணவன் உலக சாதனை

பற்களால் மினி பஸ்சை இழுத்து... பள்ளி மாணவன் உலக சாதனை

பற்களால் மினி பஸ்சை இழுத்து உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்

கோவை, ஆக. 27
கோவை ஒண்டிப்புதூரில் உள்ள புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கராத்தே மாணவர் பிரதியுமன் (வயது 15), சுமார் 3,500 கிலோ (3.5 டன்) எடை கொண்ட நான்கு சக்கர வாகனத்தை ( மினி பஸ் ) தனது பற்களால் கயிறு கட்டி இழுத்து பிரம்மாண்ட சாதனை படைத்தார்.
இவரது இந்த அசாத்திய முயற்சி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு ‘புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ (Book of World Records) சாதனைப் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு

செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சாதனை படைத்த மாணவனுக்கு அதற்கான உலக சாதனை சான்றிதழும் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் அருட்தந்தை கிருபாகரநாதன், கராத்தே பயிற்சியாளர்கள் சிரில் வினோத், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாணவன் பிரதியுமனை நேரில் பாராட்டி வாழ்த்தினர்.

error: Content is protected !!