விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் இரவு பெய்த கனமழையால் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி முத்துச்செல்வி என்ற பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துச்செல்வியின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காகச் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சாத்தூர் அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி பலி
