Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியை மீது இடைநிலை ஆசிரியை தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியை புவனா, இடைநிலை ஆசிரியை கலைமதி முறையாக பணியாற்றவில்லை என வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையால் ஆத்திரமடைந்த கலைமதி வகுப்பறையிலேயே மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியை புவனாவை தாக்கியுள்ளார்.

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் கூறுகையில், தலைமை ஆசிரியை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!