Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீமான்-கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்தது

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியர்க்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சீமான், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரசியல் களத்தில் செயலாற்றி வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்துகொண்டார். உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சீமானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.வழக்கறிஞரான கயல்விழி, அரசியலில் இருந்து விலகியிருந்த நிலையில், சமீபகாலமாக சீமானுடன் பிரசாரங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.

சீமான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

error: Content is protected !!