காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(60) வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் நேற்று தேவகோட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.மனுவில் சொத்துகள் தொடர்பாக தனது பெயரில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், வங்கி கணக்கில் ரூ.7,81,500 கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ.12 லட்சம் மதிப்பில் வெர்னா கார், ரூ.19.50 லட்சம் மதிப்பில் 150 கிராம் தங்கம் என மொத்சீமான் சொத்து ரூ.39.81 லட்சம் மனைவியின் சொத்து மதிப்பு ரூ.2.57 கோடி, 35 ஏக்கர் நிலம்தம் ரூ.39,81,500 மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மனைவி கயல்விழி பெயரில் ரூ.35 ஆயிரம் ரொக்கம், வங்கி கணக்கில் ரூ.5,27,180 கையிருப்பு, யுடிஐயில் ரூ.3.50 லட்சம், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் ரூ.95 ஆயிரம், எஸ்பிஐ ஸ்மார்ட் பிரிவிலேஜ் ரூ.10 லட்சம்., ரூ.25 லட்சம் மதிப்பில் இன்னோவா கார், ரூ.4 லட்சம் மதிப்பில் கிரிட்டா கார், ரூ.2.08 கோடி மதிப்பில் 1,600 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.2,57,07,180 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பெயரில் அசையா சொத்துக்கள் ஏதுமில்லை எனவும், மனைவி பெயரில் காரியாபட்டியில் நடப்பு சந்தை மதிப்பு ரூ.21 லட்சத்தில் 25.45 ஏக்கர் வேளாண்மை நிலம், மதுரை வடக்கு சந்திரதொண்டைமான்பட்டியில் 4 ஏக்கர் நிலம், திண்டுக்கல் வில்பட்டி கிராமத்தில் 6 ஏக்கர் வேளாண்மை அல்லாத பிற நிலங்கள் உள்ளது. இதன் தோராயமான நடப்பு சந்தை மதிப்பு ரூ.36 லட்சத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார். தனது பெயரில் ரூ.5.11 லட்சம் கடன், மனைவி கயல்விழி பெயரில் ரூ.18.39 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

