Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

483 நாட்களுக்கு பிறகு வந்தார்.. திரண்டு வரவேற்ற கரூர்..

பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26ம் தேதி வெளியே வந்தார். அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், ஜாமீனில் இருந்து வெளியே வந்த பிறகு முதன்முறையாக அதாவது 483 நாட்கள் கழித்து சொந்த ஊரான கரூருக்கு இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்துள்ளார். பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பயணியர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில்பாஜியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!