Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம்

தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும், பெண்களுக்கான உரிய தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக பேரவையில் முதல்வர் விஜய், தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளார். நமது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய தீர்மானம் இது என்றார்.

வீட்டு பெண்கள் சமூகத்தில் உயர்ந்தால் தான் நமது குடும்பத்திற்கு கிடைக்கும். நமது வீட்டு பெண்கள் அரசியலிலும் முன்னேற இடஒதுக்கீடு அவசியம். பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது சலுகை அல்ல; அதுஒரு சமூகநீதி சார்ந்தது. தமிழ்நாட்டில் ஆண்களை விட, பெண்கள் தான் அதிகம் வாக்கு செலுத்தி உள்ளனர்.

மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகு மகளிர் இடஒதுக்கடு அமல் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டை மக்கள் தொகை, தொகுதி மறுவரையறையோடு இணைத்து ஒத்தி வைக்க கூடாது என்றார் விஜய். தொகுதி மறுவரையறை குறித்து 6 கட்சி எம்.பி-க்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கான தொகுதிகள் குறையும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்பதை மாற்றக் கூடாது.

மக்களவை, மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2 : 1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தின் போது குறிப்பிட்டார். மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டை தாமதமின்றி 543 தொகுதி அடிப்படையில் 2029 தேர்தலில் செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்கு பின் நடைபெறும் தொகுதி மறுவரையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்களவையில் தற்போதுள்ள எண்ணிக்கையே அப்படியே இருக்க வேண்டும் என தொகுதி மறுவரையறை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ள முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

error: Content is protected !!