Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சர்வர் பிரச்னை… திருச்சியில் ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சர்வர் பிரச்னை-திருச்சியில் ரேசன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரேசன் கடைகளில் ரேசன் பொருட்களை பொதுமக்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் பிஒஎஸ் இயந்திரத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக சரியாக இயங்கவில்லை என குற்றம் சாட்டி அந்த இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக
வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.ரமேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் எடத்தெரு பாபு மாவட்ட செயலாளர் பொன்னர் , நிர்வாகிகள்ஜாபருல்லா, தேவசேனா , விஜயராணி, பூங்குடி, சக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிறகு அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினிடம் பேச்சுவார்த்தை நடத்தி சர்வர் பிரச்சனையை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

error: Content is protected !!