Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் துயர சம்பவத்தின் போது பணியாற்றிய டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உட்படப் பல காவலர்கள் இடமாற்றம்

கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு காவலர்கள் என பலர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் டவுன் டிஎஸ்பி செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை டிஎஸ்பி கடலூர் மாவட்டத்திற்கும், அரவக்குறிச்சி டிஎஸ்பி அப்துல் கபூர் தர்மபுரி மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், கரூர் நகர காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப்பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், தலைமை காவலர்கள் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை தலைமை இயக்குனரகம் மூலமாக இந்த பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவத்தின் போது பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!