Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் வன்கொடுமை… போக்சோவில் 2 பேர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார். மேற்சொன்ன 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம் தாத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!