Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

மாணவியின் வயிறு திடீரென  பெரிதானதால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர்  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி மாணவியிடம் விசாரித்தபோது விக்னேஸ்வரன் தான்  இதற்கு காரணம் என தெரியவந்தது. இது குறித்து முசிறி மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!