Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரே ஆண்டில் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அதிர்ச்சி

ஒரே ஆண்டில் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்- அதிர்ச்சி

2025-26ம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), 2025-26 கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள 58 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளை படிப்படியாக மூடப்படும் என அறிவித்துள்ளது. குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட கல்வி மற்றும் உள்கட்டமைப்புத் தரங்களைப் பூர்த்தி செய்யத் தவறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கவலையளிக்கக்கூடும் என்றாலும், இந்த நிறுவனங்களில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்கள் தங்களது பட்டப்படிப்புகளை எவ்வித இடையூறுமின்றித் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கல்லூரி (AICTE) தெளிவுபடுத்தியுள்ளது. எந்தக் கல்வியாண்டில் மூடல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ, அந்தக் கல்வியாண்டில் அந்நிறுவனங்கள் முதலாம் ஆண்டு மாணவர்களைச் சேர்க்காது. தற்போது பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை, கல்லூரிகள் ஏற்கனவே உள்ள மாணவர் குழுக்களுக்குத் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 12 கல்லூரிகளும், மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாப்பில் தலா 4 கல்லூரிகளும், ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா 3 கல்லூரிகளும் மூடப்படவுள்ளன. குஜராத், கர்நாடகா, புனே மற்றும் தமிழ்நாட்டில் தலா 2 கல்லூரிகளும், குறைந்தபட்சமாக ஹரியானா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தலா 1 கல்லூரிகளும் மூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!