Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எஸ்ஐ வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டானியனில் எஸ்ஐ பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சிவராத்திரியை முன்னிட்டு கிருஷ்ணன்கோவில் அருகே குண்ணூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். இன்று காலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது இரு பீரோக்களில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!