Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள்… புதுகை கலெக்டர் வழங்கினார்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை  கலெக்டர் வழங்கினார். மேலும் பொதுமக்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் கலெக்டர்  பெற்றுக்கொண்டார். மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட அதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!