Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாப்ட்வேர் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை-திருச்சியில் பரிதாபம்

திருச்சி கே கே நகர் இந்திரா நகர் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 55. இவர் எல் ஐ சி காலனி, வெங்கடேஸ்வரா தெருவில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார் . இந்த நிலையில் கடந்த 21ம் தேதி முதல் புதிய தொழில் திட்டம் குறித்து மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் தனது மனைவியிடம் கூறிவிட்டு அலுவலகத்திற்கு வந்தவர் கதவை தாளிட்டு உள்ளே தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் அவருக்கு அவரது மனைவி கௌரி 45 அலுவலகத்திற்கு வந்து கதவைத் தட்டிய போது உள்பக்கம் தாளிட்டு கதவு திறக்கப்படாததால் கேகே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கேகே நகர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய கேகே நகர் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!