தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள சாலமன் தீவுகள், ஆஸ்திரேலியாவைத் தனது முதன்மை பாதுகாப்பு கூட்டாளியாக அறிவித்துள்ளது. இதற்காக இரு நாடுகளின் பிரதமர்களான மேத்யூ வேல், அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 25-ம் தேதி கான்பெராவில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, சாலமன் தீவுகளின் காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த ஆஸ்திரேலியா உதவும். மேலும், அந்நாட்டில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவ அல்லது பாதுகாப்புத் தளமும் அமைக்க அனுமதிக்கப்படாது.
ஆஸியை முதன்மை பாதுகாப்பு கூட்டாளியாக அறிவித்த சாலமன் தீவுகள்
