Skip to content

மாமியார் வீட்டில் மருமகன் தீக்குளித்து பலி… திருச்சி க்ரைம்

மாமியார் வீட்டில் மருமகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து சாவு

திருச்சி பாலக்கரை மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் இளங்கோ (54. ) இவரது மனைவி சுஜாதா ( 51. ) கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக இளங்கோ சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை, சற்று மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்த நிலையில் தேதி இளங்கோவின் செல்போன் செயல்பாடுகள் வேறொருவரால் கண்காணிக்கப்படுவதாக (ஹேக் செய்யப்பட்டது) என அவர் தன் மனைவி சுஜாதாவிடம் கூறினார். இதை அடுத்து அவர் பொன்மலை போலி சரகம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு திடீரென இளங்கோ தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகையிலை பொருட்கள் விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சி கோரையாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக செசன்ஸ் கோர்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .இதை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி புகையிலை பொருட்கள் விற்ற மேல புங்கனூரைச் சேர்ந்த கதிரேசன் (23 )என்ற வாலிபரை கைது செய்தனர் அவரிடம் இருந்து 20 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதேபோல மேல கல்கண்டார்கோட்டை அருகே புகையிலை விற்ற வேங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் ( 38 ) என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது . பின்னர் இருவரையும் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

error: Content is protected !!