Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து ரோடு அருள்மிகு பாலாம்பிகை சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன்,நெய் ,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகபெடி, அரிசி மாவு,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.

அதன் தொடர்ச்சியாக பைரவருக்கு பட்டாடை உடுத்தி, வடமாலை சாட்சி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!