கரூர் மினி பேருந்து நிலையம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வைகாசி மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு வைகாசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரி

சி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாவதனை நடைபெற்றது.
கரூர் மினி பேருந்து நிலையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வாராஹி அம்மன் பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
