Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு –திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவையில் பிரசித்தி பெற்ற சித்தாபுதூர் ஐயப்பன்

கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு, ஐயப்ப சுவாமி

உள்ளிட்ட சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஓணம் பண்டிகையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் அத்தப்பூ கோலம், கோவில்

வளாகத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி முன்பு ஏராளமான வண்ணமயமான மலர்களை கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அத்தப்பூ கோலம், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

அத்தப்பூ கோலத்தை சுற்றிலும் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஓணம் பண்டிகையின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் முழுவதும் பண்டிகை களைகட்டியுள்ளது.

மேலும், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் பாரம்பரிய முறையில் புத்தாடைகள் அணிந்து, குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டு, ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்று வருகின்றனர்.

காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஓணம் பண்டிகையையொட்டி சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம் பக்தர்களிடையே ஆன்மிக மகிழ்ச்சியையும் பண்டிகை உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!