Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்… ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கரூரில் புகழ்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை  முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணெய்  காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காலபைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வடைமாலை சாற்றி, சந்தனத்தால் பொட்டிட்டு பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நைவேத்தியம்   சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!