Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்த இரண்டரை மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 70 சதவீதம் வீழ்ச்சியடைந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை தற்போது மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!