Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுலுக்கு இன்று 54வயது….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

 காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் பேனர்கள், கொடி, தோரணம் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் காந்தி மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்துசேரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!