கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட்

ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் மாநில அளவில் பெண்களுக்கும், மாவட்ட அளவில் ஆண்களுக்குமான மாபெரும் கபடி போட்டி இன்று தொடங்கி வருகின்ற 15.02.2026 வரை நடைபெற உள்ளது. ரூபாய் 5,23,168

மதிப்பிலான பரிசுத்தொகையும் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளது.
போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு

கபடி போட்டியை ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.
குறிப்பாக 100க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
கபடி போட்டியை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து விளையாட்டை கண்டு ரசித்தனர்.

