அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலுக்குத்தான் முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெளிவுபடுத்தியுள்ளது. இனிவரும் நிகழ்வுகளில் முதலில் மாநில பாடலும், அதனை தொடர்ந்து தேசிய பாடலான வந்தே மாதரமும், இறுதியாக தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை மறுக்கப்படுவதாக அண்மையில் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
