திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடனும், அடிப்படை உரிமையின்றியும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகளின் லட்சக்கணக்கான மக்கள் எம்.எல்.ஏ. இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடை கோரிய வெங்கடாஜலபதி என்பவரின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
