பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, பள்ளி மாணவர்கள் பயத்தில் அலறிய காட்சி வெளிவந்துள்ளது. மைதானத்தில் மாணவர்கள் பிரேயர் செய்துகொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கி அங்கிருந்த தகர கூடாரம் சரிந்து விழ, அந்த சின்னஞ்சிறு மழலைகள் பயத்தில் மிரண்டு போயின. அவர்களை ஆசிரியர்கள் அரவணைத்து பாதுகாத்து நின்றிருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
