செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக, தேவாரம் அருகேயுள்ள அவரது நண்பர்கள் அன்பரசன் மற்றும் அருண் ஆகியோரின் தோட்டத்து வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள 31 ஏலக்காய் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக தீ விபத்தில் 67 மூட்டை ஏலக்காய்கள் எரிந்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீதமுள்ள மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது.
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரண வழக்கில் திடீர் திருப்பம்
