திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..
பெஞ்சல் புயல் தாக்கத்தினால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையில் அண்ணாமலையார் மலையில் மண் மற்றும் பாறை சரிவு ஏற்பட்டது. இதில் வ.உ.சி. நகரில் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு 2 வீடுகள் சேதம் அடைந்தன. பாறை உருண்டு விழுந்ததால் வீடு ஒன்று புதையுண்டது. அந்த வீட்டில் இருந்த ராஜ்குமார், மீனா தம்பதி, அவர்களின் குழந்தைகள் கவுதம், இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா, வினோதினி, ரம்யா என 7 பேர் புதைந்தனர். இந்த சம்பவத்தில் கனமழை காரணமாக பாறாங்கற்கள் உருண்டதில், மலையின் கீழே இருந்த 2 வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். மற்றொரு வீட்டில் உள்ள 7 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலை ஏற்பட்டது. 
Read More »திருவண்ணாமலையில் மண்சரிவில் புதைந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..

