Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லோகோ பைலட்

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

  • by Editor

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ்… Read More »ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

பிரதமர் மோடி தலைமையிலான பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக நாளை மாலை பதவி ஏற்கிறது. டில்லியில் நடைபெறும் இவ்விழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உலக தலைவர்கள் பங்கேற்க அழைப்பு… Read More »மோடி விழாவில் கலந்து கொள்ளும் வந்தே பாரத் பெண் ‘லோகோ பைலட்’..

செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகே மர்ம நபர் ஒருவர், மின்சார ரெயிலின் லோகோ பைலட்டை தாக்கி, அவரது இருக்கையில் அமர்ந்து மின்சார ரெயிலை இயக்க முயற்சி செய்தார்.  இதனை தொடர்ந்து, அந்த நபருக்கும், ரெயில்வே… Read More »செங்கல்பட்டு… இன்ஜின் டிரைவரை தாக்கி ரயிலை கடத்த முயன்ற நபர்…பகீர் தகவல்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

ஒடிசா ரெயில் விபத்து நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள நிலையில், ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ரெயில்வே நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரெயில்களை இயக்கும் லோகோ பைலட்டுகள்… Read More »ரயில் இன்ஜின் டிரைவர்கள் செல்போன் வைத்திருக்க தடை

error: Content is protected !!