Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பைக்கு பறந்த ”தக்லைப்” படக்குழு

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இந்தி டிரைலர் விழாவிற்காக   ‘தக் லைஃப்’ படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.   படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா பாடல் செம வைரலானது.thug life  இந்நிலையில், படத்தின் இந்தி டிரைலர் விழாவிற்காக  கமல்ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட ‘தக் லைஃப்’ படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர்.

error: Content is protected !!