Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

10 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு

தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், சிவகங்கையின் ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையராகப் பணியாற்றிய வி.பி. ஜெயசீலன் ஐ.ஏ.எஸ், சுற்றுலாத்துறை ஆணையராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.புவியியல் மற்றும் சுரங்கத்துறை: மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநராக இருந்த டி. பிரபாகரன் (பிரபுசங்கர்) ஐ.ஏ.எஸ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு வணிகவரி இணை ஆணையராக இருந்த பொன்மணி ஐ.ஏ.எஸ், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இத்துறைக்கு புதிய செயலராக சந்தியா வேணுகோபால் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.மாநகர போக்குவரத்து கழகத்துறையின் புதிய மேலாண்மை இயக்குநராக டி. மோகன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்கிறார்

error: Content is protected !!