Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்….. முதல்வர் அறிவிப்பு

தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள  அரசு வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.   அப்போது மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு புகழாரம் சூட்டினார். அதன்பின்னர் பேசிய அவர், தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.  மேலும், இளம் வேளாண்மை மற்றும் மரபியல் துறை சார்ந்த கல்வியில் அதிக மதிப்பெண் பெறும் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!