Skip to content
Home » தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

தஞ்சை ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை…… ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் கைது

  • by Senthil

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40),  தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரகாஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதை அடுத்து பிரகாஷின் மனைவி கமலாதேவி செல்போனில் கணவரை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. பல இடங்களில் பிரகாசை தேடிப்பார்த்தார்   கமலா தேவி.  பார்த்தார்.  இந்த நி்லையில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரகாஷ் இறந்து கிடப்பதாக கமலாதேவிக்கு அவரது உறவினர் தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு  கமலா தேவி சென்று பார்த்தபோது பிரகாஷ் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.  இது குறித்து   தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் கமலாதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது குடிபோதையில் இருந்த பிரகாசை பைக்கில் ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் பைக்கில் செல்வதும் தெரியவந்தது. இந்த காட்சிகளில் பதிவான காட்சிகளை  வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் வீடியோவில் இருந்தவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி(29), தஞ்சை மங்களபுரம் அனில்நகரை சேர்ந்த ரமணி மகன் பிரவீன்(28) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் குடிபோதையில் இருந்த பிரகாசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து கொண்டதுடன் பைக்கையும் எடுத்து கொண்டு சென்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் தாக்கியதில் பிரகாஷ் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!