Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டம்….தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்

இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நல்லூர் கந்தசாமி கோயிலில் இன்று தேர்த் திருவிழா நடந்தது. தேரோட்டத்தை தொடக்கி வைக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது சன்னிதானம் மாசிலாமணி தேசிக சுவாமிகள் நேற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து இலங்கை சென்றார். தருமபுரம் ஆதீனத்திற்கு பூரணகும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் இன்று காலை இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோயிலில்தேர்த் திருவிழாவை தொடக்கி வைத்து வழிபாடு மேற்கொண்டார். இதில் நல்லை ஆதீன குருமகா சந்நிதானம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!