Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயிலாடுதுறை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ நாஞ்சில்நாடு பகுதியில் மதுரைவீரன், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலைபூஜை துவங்கியது.

 

இதனை அடுத்து கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. புனித நீர் அடங்கிய கடங்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விமான கோபுர கலசங்களை அடைந்தது. அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத புனித நீர் கோபுர கலத்தின் மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!