சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரைசேர்ந்தவர் ராபர்ட் இவரது மனைவி சஞ்சனா (33) இவர் என்டிபிஎஸ் வழக்கு தொடர்பாக கே2 – அயனாவரம் போலீஸ் நிலையம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நிர்வாக காரணமாக திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 28 ந்தேதி திருச்சிகாந்தி மார்க்கெட்டில் உள்ள மத்திய பெண் சிறையில் இருந்த விசாரணை கைது சஞ்சனாவுக்கு சிறை கைதி இந்திரா உணவு கொடுத்த போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு சஞ்சனா மிரட்டல் விடுத்ததாக சிறை பெண் அதிகாரி இந்திரா காந்திமார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு சஞ்சனா மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

