Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் பயங்கரம்: விவசாயியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்; 10 இடங்களில் பாய்ந்த குண்டுகள்

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வளையபட்டியைச் சேர்ந்த கருணைகிரி (48) விவசாயம் செய்து வருகிறார். களத்து வீட்டில் இருந்த போது நேற்று இரவு முன்பகை காரணமாக அடையாளம் தெரியாத மர்ம நபரால் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த பொழுது அடிபட்ட நிலைமையில் விவசாயி கிடந்துள்ளார் அதனால் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்பொழுது அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே நாட்டு துப்பாக்கியால் அடையாளம் தெரியாத நபர் விவசாயியை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!