பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை தொடங்கினார். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் டெட் தேர்வு கட்டாயம் என தெரிவித்துள்ளார். பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெட் தேர்வில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
