Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுக மா.செ. பதவி…….தளவாய் சுந்தரத்துக்கு கல்தா….. எடப்பாடி அதிரடி

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் இருந்தவர் தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் தற்போது கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாகவும் உள்ளார். இவரை மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

கட்சியின் கட்டுப்பாடு மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால்  அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதில் எடப்பாடி கூறி உள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த 6ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. இதனை அதிமுக எம்.எல்.ஏவான தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்ததால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!