Skip to content

திருவையாறில் சப்தஸ்தான திருவிழா … 7 ஊர் பல்லக்கு புறப்பாடு…

தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கோயில் சித்திரைப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான ஏழூர்  பல்லக்கு புறப்பாடு இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலிருந்து புறப்பட்ட பல்லக்கு திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்  ஆகிய 6 ஊர்களுக்கும் சென்று  அங்குள்ள  6 பல்லக்குகளையும் அழைத்துக்கொண்டு  நாளை 26ம் வெள்ளிக்கிழமை மீண்டும் திருவையாறு வந்தடையும்.  அப்போது  திருவையாறில் பொம்மைக்கு பூப்போடு் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர்  சிறப்பாக செய்துள்ளனர். இந்த விழாவையொட்டி நாளை காலை  வாணவேடிக்கை நிகழச்்சியும் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!