Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்….

ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பில் சமய,சமூகப் பணிகள்’ நூல் அறிமுக கூட்டம் நடைப் பெற்றது. தஞ்சை, கும்பகோணத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு  அய்யூப்கான் தலைமை வகித்தார். எழுத்தாளர் பரிபூரணன் , தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சங்கர், அனந்த சயனம் , ஆசாத் அலி உட்பட பலரும் பங்கேற்றனர். ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்று, ஜோதிமலை இறைப் பணி திருக்கூட்டத்தின் சமய,சமூகப் பணிகள்” என்னும் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் பேசும் போது… இறை நம்பிக்கை மற்றும் இறை மறுப்பு கொள்கை கொண்ட இயக்கங்களும், தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தியே பணியாற்றுகின்றன. சரியாகச் சொல்லப்போனால் இவ்விரு இயக்கங்களை வழி நடத்துபவர்களும் மனித குல முன்னேற்றத்திற்காகவே பாடுபடுகின்றனர். ஆனால் இறை நம்பிக்கையே மனிதனே முழுமைப்படுத்துகிறது. அவரவர்க்குரிய சமய சின்னங்களும். அடையாளங்களும் முக்கியமானது என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!