Skip to content

தஞ்சை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் பணம் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 36). இவர் நேற்று தனது தாய் மற்றும் உறவினரை தஞ்சை ரயில் நிலையம் சென்று ஊருக்கு அனுப்பினார். பின்னர் அருகில் இருந்த ஏ.டி.எம்.மில் தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.4000 தனது கைப்பையில் வைத்து கொண்டார்.

பின்னர் ஷேர் ஆட்டோ மூலம் பால்பண்ணை நிறுத்தத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கல்யாணசுந்தரம் நகர் 3வது தெருவில் நடந்து சென்ற போது ஸ்கூட்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பாக்கியலட்சுமி வைத்திருந்த கைப்பையை சட்ட பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி கூச்சலிட்டார். இருப்பினும் அந்த மர்மநபர்கள் கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பாக்கியலட்சுமி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கைப்பையை பறித்து சென்றது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தது புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பிலகுளவியாப்பட்டி பகுதியை சேர்ந்த த.பூபதிராஜா (20) மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 15, 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் ‌என மொத்தம் 3 பேர் என்று தெரியவந்தது. இதையடுத்து பூபதி ராஜா உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!