Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா… முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, ஏப்ரல் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல், 20ம் தேதி வரை பதினெட்டு நாள்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான,பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 18ம் தேதியும், தேரோட்டம், ஏப்ரல் 20ம் தேதியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் இன்று (08ம் தேதி) காலை நடை பெற்றது.

இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மாதவன் மணிகண்டன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!