Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை- விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கு… கண்டு ரசித்த பொதுமக்கள்

500 ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெறும் தஞ்சாவூர் முத்து பல்லாக்கு. 15க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகளை ஒரே இடத்தில் கண்டு ரசித்த பொதுமக்கள்.

திருஞானசம்பந்தர் குருபூஜை ஆண்டு தோறும் வைகாசி மாதம் வெகு விமர்சையாக தஞ்சாவூரில் நடைபெறும். இதேபோல் திருஞான சம்பந்தர் குருபூஜை ஒட்டி தஞ்சாவூர் நகர பகுதிகளான கீழவாசல், மகர்நோம்பு சாவடி, அரிக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்களில் இருந்து விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லாக்குகள் இன்று அதிகாலை அந்தந்த ஆலயங்களில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் இராஜ வீதிகளுக்கு வந்தன. இராஜ வீதிகளில் உலா வந்த 10க்கும் மேற்பட்ட பல்லாக்குகளை திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பல்லாக்குகள் ராஜவீதிகளில் உலா வந்து பின்னர் விடிந்த உடன் அந்தந்த ஆலயங்களுக்கு சென்றடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் மட்டுமே இந்த முத்து பல்லாக்கு திருவிழா 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!