தவெகவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், தவெகவின் வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களிலும் கொண்டாடி வருகின்றனர். கோவை டவுன்ஹாலில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். மேலும், அவர்கள் ‘TVK வென்றாச்சு, காங்கிரஸ் சேர்ந்தாச்சு, ‘வேண்டும் வேண்டும் கூட்டணி ஆட்சி வேண்டும்’ போன்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

