தமிழக முதலமைச்சர் கர்நாடகம் சென்றால் கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் பொதுச் செயலாளர்
பி ஆர் பாண்டியன் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது, கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு இன்று பாராளுமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வனத்துறை அனுமதி அளிக்க முடியாது என கூறியுள்ளது, இந்த நிலையில் சட்டத்திற்கு உட்பட்டு தான் காவிரி பிரச்சனையை தமிழகம் அணுக வேண்டும், அதுதான் தமிழ்நாட்டு நலனுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று தொடர்ந்து விவசாயி சங்கங்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது, இந்த நிலையில் வரும் 3ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக மீண்டும் மீண்டும் கர்நாடக முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார், கர்நாடகா போவது குறித்து இறுதி முடிவை இதுவரை முதலமைச்சர் வெளியிடவில்லை, அங்கே கர்நாடக முதல்வர் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் வரும் பட்சத்தில் காவிரி டெல்டா நீர் பிடிப்பு பகுதிகளை பார்வையிடுவதற்காக தனி ஹெலிகாப்டர் கர்நாடக அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும், அந்த ஹெலிகாப்டரில் சென்று அவர் அனைத்து பகுதிகளையும் பார்வையிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் கூறியிருக்கிறார், இருவருக்கும் உள்ள நட்பால் பார்வையிடுவதற்காக தமிழக முதலமைச்சர் செல்வாரேயானால் திரும்பும் போது தமிழ்நாட்டிற்கு டி கே சிவக்குமாரோடு இங்கு வருகை தந்து காவிரி டெல்டாவில் இருக்கின்ற வறண்டு கிடக்கின்ற பகுதிகளையும் பார்வையிடுவதற்கான நடவடிக்கையை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும், 50 ஆண்டுகாலம் போராடி பெற்ற உரிமையை பேச்சுவார்த்தை என்கிற பெயரால் பறி போய்விடக் கூடாது என்ற அச்சத்தில் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகிறோம், அதற்கு மதிப்பளித்து தமிழக முதல்வர் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
