முதலமைச்சர் விஜய் உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வை தெரிந்துகொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், முதலமைச்சர் அவர்கள் லண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும். அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் போக வேண்டும். தயவுசெய்து உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் ‘நார்மலாக’ இருக்கிறது என்பார். மக்கள் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வை முதல்வர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் – மு.க.ஸ்டாலின்
